| ADDED : டிச 10, 2025 08:26 AM
சூலூர்: மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சூலூர் வட்டார வள மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், சூலூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் தேவி முகாமை துவக்கி வைத்தார். கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை டாக்டர்கள், மாற்றுத் திறனாளிகளை பரிசோதித்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். தேசிய அடையாள அட்டை, பஸ் பாஸ், உதவி உபகரணங்கள், உதவித்தொகை ஆகியவற்றை பெற பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இலவச அறுவை சிகிச்சை, மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயன் பெற, பதிவுகள் செய்யப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், அடையாள அட்டைகளை வழங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் ஸ்ரீ கலா, தன்னாசி, வள மைய மேற்பார்வையாளர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 100 க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி தலைமையில், சிறப்பு கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். தன்னார்வலர் தர்மராஜ் உணவு வழங்கி உபசரித்தார்.