மேலும் செய்திகள்
இடைக்கால ஜீவனாம்சம் கேட்கலாமா?
07-Sep-2025
மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு, கணவன் கோவையில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மனைவி சென்னையில் வசிக்கிறார். கோவை கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை, சென்னைக்கு மாற்றக் கோரி மனைவி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். யாருக்கு சாதகமாக உத்தரவு வரும்? ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில், மனைவி எந்த ஊரில் வசிக்கிறாரோ, அதே ஊரிலுள்ள கோர்ட்டில் தான் கணவன் விவகாரத்து கோரி வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என, குடும்ப நலச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கோவையில் நடந்து வரும், விவாகரத்து வழக்கானது சென்னைக்கு மாற்றப்படும் என்பதில் சந்தேகம் கிடையாது. மனைவிக்கு சாதகமாக உத்தரவு வருவதற்கே வாய்ப்புள்ளது. திருமணம் முடிந்த எட்டு மாதத்தில், தம்பதியருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்து விட்டனர். ஹிந்து திருமண சட்டப்படி, 'மியூச்சுவல் டைவர்ஸ்' கேட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?ஹிந்து திருமண சட்டம், 1955 சட்டப்பிரிவு 14 - ன் கீழ், திருமணமாகி ஓராண்டு முடிந்த பிறகே, விவகாரத்து கேட்டு, குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும். ஆனால், இதே சட்டப்பிரிவு 14(1) ன் கீழ், விதி விலக்காக, குடும்ப நீதிமன்றம் அனுமதி அளித்தால், விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு ஒன்றில் உறுதி செய்துள்ளது. -- வக்கீல் ஆர்.சண்முகம்ரேஸ்கோர்ஸ்.
07-Sep-2025