மேலும் செய்திகள்
அகிலம் ஆளும் தாயே... காத்தருள்வாய் நீயே!
19-Jul-2025
சூலுார்; ஆடி கிருத்திகையை ஒட்டி, சூலூர் வட்டார முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நேற்று முன்தினம் நடந்தன. சின்னியம்பாளையம் வேல்முருகன் கோவில், சூலூர் சிவன் கோவில், கண்ணம்பாளையம் கோவை பழனியாண்டவர் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் மற்றும் சூலூர் பழனியாண்டவர் கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. காங்கயம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் முருகப்பெருமானுக்கு, பால் தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்கார பூஜை நடந்தது. மாலை, திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்று, பூக்கள், மஞ்சள் குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர். தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.
19-Jul-2025