உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சா, சாராய ஊறல் பறிமுதல்

கஞ்சா, சாராய ஊறல் பறிமுதல்

சூலுார்; சூலுார் அருகே வீட்டில் சாராய ஊறல் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சூலுார் அடுத்த குரும்பபாளையம் பகுதியில், சூலுார் எஸ்.ஐ., சிவக்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கைப்பையுடன் சென்ற நபரை, நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 3 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. விசாரணையில் அந்நபர், பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தை சேர்ந்த திலீப்குமார்,27 என்பதும், குரும்ப பாளையத்தில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருவதும் தெரிந்தது. அந்நபர் தங்கியுள்ள அறைக்கு சென்று சோதனையிட்டதில், பின்புறத்தில், 70 லிட்டர் சாராய ஊறல் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.கஞ்சா மற்றும் ஊறலை பறிமுதல் செய்த போலீசார், திலீப்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை