உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோர்ட் மாடியிலிருந்து குதித்த கஞ்சா கைதி

 கோர்ட் மாடியிலிருந்து குதித்த கஞ்சா கைதி

கோவை: சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ்,32. இவர், கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கோர்ட்டில் ஆஜராக வந்தார். ஜே.எம்:5, கோர்ட் அமைந்துள்ள, மாஜிஸ்திரேட் கோர்ட் கட்டடத்தின் முதல் மாடியில் காத்திருந்த போது, திடீரென கீழே குதித்தார். அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது காலில் லேசான காயம் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை