மேலும் செய்திகள்
கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்; மூவர் கைது
05-Jun-2025
கோவை; கரும்புக்கடை பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வாலிபர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.கோவை, புட்டுவிக்கி ரோட்டில் வாலிபர்கள் சிலர் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கரும்புக்கடை போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது, புட்டுவிக்கி சாலையில் உள்ள காலி இடத்தில், சந்தேகத்திற்கிடமாக இரண்டு இளைஞர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் கஞ்சா வியாபாரம் செய்வது தெரிந்தது. அவர்களை ஸ்டேஷன் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். அவர்கள் மதுக்கரையை சேர்ந்த லோகநாதன், 21 மற்றும் விஷ்ணுதேவ், 19 என்பது தெரியவந்தது.இருவரும் மொத்தமாக கஞ்சா வாங்கி, கல்லுாரி மாணவர்கள் உட்பட பலருக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து, 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 2500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
05-Jun-2025