உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கார்-பைக் மோதல்; ஒருவர் பலி

கார்-பைக் மோதல்; ஒருவர் பலி

சூலுார் : சூலுார் அருகே காரும், பைக்கும் மோதிக்கொண்ட விபத்தில், தனியார் நிறுவன ஊழியர் பலியானார். நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் அபினேஷ், 28, அஜீஸ், 25. இருவரும் சூலுார் அடுத்த பாரதிபுரத்தில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, இருவரும் பைக்கில் கண்ணம்பாளையம் நால் ரோடு வழியாக வீட்டுக்கு சென்றனர். பைக்கை அபினேஷ் ஓட்டினார். நால் ரோடு அருகே சென்றபோது, எதிரே வந்த கார், பைக் மீது மோதியது. இதில், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த அஜீஸ் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.காயமடைந்த அபினேஷ் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை