உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.ஐ., மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் பறிமுதல்

எஸ்.ஐ., மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் பறிமுதல்

கோவை; கோவை வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., தனசேகர், 51. கடந்த 18ம் தேதி ஆர்.எஸ்.புரம் பகுதியில் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று, அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றது. போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக காரை தேடி வந்தனர். ஒரு கேமராவில், கார் வேகமாக செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, சாய்பாபா காலனியை சேர்ந்த அனஸ்குமார், 20 என்ற கல்லூரி மாணவர் என தெரிந்தது.அனஸ்குமாரின் வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த காரை பறிமுதல் செய்தனர். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ