உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீதிமன்ற பிடிவாரன்ட்  வராதோர் மீது வழக்கு

நீதிமன்ற பிடிவாரன்ட்  வராதோர் மீது வழக்கு

கோவை: நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல், பிடிவாரன்ட் நிலுவையில் இருந்த 3 பேர் மீது, மாநகர போலீசார் புதிய வழக்குகள் பதிவு செய்து, தேடி வருகின்றனர். வெள்ளலுார் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு போத்தனுார் போலீஸ் ஸ்டேஷனிலும், மதுரை  ரவிகுமாருக்கு சுந்தராபுரம் ஸ்டேஷனிலும், செல்வபுரம் சுதாகருக்கு ராமநாதபுரம் ஸ்டேஷனிலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இவர்கள், நீதிமன்றம் குறிப்பிட்ட தேதிகளில் ஆஜராகாமல் இருந்துள்ளனர். தொடர்ந்து பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு போலீசார் அவர்களின் முகவரிக்கு சென்று பார்த்தபோது தலைமறைவானது தெரிந்தது. உடனடியாக தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.   வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் கோர்ட் குறிப்பிட்ட தேதிகளில் தவறாமல் ஆஜராக வேண்டும். தவறுவோர் மீது பிடிவாரன்ட் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி