உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேக்கரி உரிமையாளரை தாக்கிய ஐவர் மீது வழக்கு

பேக்கரி உரிமையாளரை தாக்கிய ஐவர் மீது வழக்கு

கோவை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் ராம், 25. கோவை சிட்ரா பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். கல்லுாரி மாணவர்கள் பேக்கரிக்கு வந்து செல்வர். ராம், கல்லுாரி மாணவர்கள் பலருடனும் நட்புடன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பேக்கரி அருகில் நின்றிருந்த கல்லுாரி மாணவர் ஹரி, 'எதற்காக தன்னை பார்த்துக் கொண்டே உள்ளாய்' எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவர், ராமுடன் தகராறில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் ஹரியின் நண்பர் ரிச்சர்டு, பேக்கரி உரிமையாளர் ராமை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும், 'கான்பிரன்ஸ்' அழைப்பில் இருந்த நித்தியானந்தாவும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டினார். இந்நிலையில், ராம் வீட்டுக்கு வந்த மர்மநபர்கள், பட்டாக்கத்தியால் வெட்டியதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பீளமேடு போலீசார் ஐவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை