மேலும் செய்திகள்
சரக்கு வாகனம் மோதியதில் இளைஞர் பலி: 3 பேர் காயம்
28-Sep-2025
கோவை: ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் சுகாரியா வினோத்குமார். தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், 'கோவைபுதுாரை சேர்ந்த மேகநாதன், 36 என்பவர் கடந்த, மே 15ம் தேதி ஓட்டிச் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதாகவும், அதற்கான காப்பீட்டு தொகையை வழங்குமாறும் காப்பீட்டு நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஆய்வு செய்த போது, அவர் வாகனத்தை ஓட்டவில்லை என்பதும், வேறு ஒருவர் ஓட்டிச் சென்றதும் தெரிந்தது. தவறான தகவலை அளித்து, சி.எஸ்.ஆர்., பதிவு செய்திருந்தது தெரிந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தியிருந்தார். புகாரின் பேரில், கோவை ராமநாதபுரம் போலீசார் மேகநாதன் மீது, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
28-Sep-2025