உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்ச்சை ஷர்மிளா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

சர்ச்சை ஷர்மிளா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

கோவை:கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா, 32, கோவையின் முதல், தனியார் பஸ் டிரைவராக பணிபுரிந்து புகழ் பெற்றார். இவரை தி.மு.க., -- எம்.பி., கனிமொழி உட்பட பலரும் சந்தித்து பாராட்டியுள்ளனர்; பஸ்சில் அவருடன் பயணம் செய்துள்ளனர். அந்த சமயத்தில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அவர் பணியில் இருந்து விலகினார். சில நாட்களுக்கு முன் ஷர்மிளா தன் காரில், கோவை சத்தி ரோடு, சங்கனுார் ரோடு சந்திப்பில் சென்றார். அப்போது அங்கு போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ராஜேஸ்வரி வாகனங்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார்.அதை ஷர்மிளா காரை ஓட்டியவாறு, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதில், எஸ்.ஐ., ராஜேஸ்வரி சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து பணம் வசூலிப்பதாகவும், டிரைவர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் பதிவிட்டு இருந்தார்.இதுகுறித்து அறிந்த எஸ்.ஐ., ராஜேஸ்வரி, மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதில், 'நான் யாரையும் திட்டவில்லை. என்னை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், போலியான செய்தியை பரப்பி, வீடியோ வெளியிட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்து இருந்தார். புகாரின் படி, சைபர் கிரைம் போலீசார் நேற்று, டிரைவர் ஷர்மிளா மீது, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை