உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  5.5 கிலோ நகை மோசடி இன்ஸ்., மீது வழக்குகள்

 5.5 கிலோ நகை மோசடி இன்ஸ்., மீது வழக்குகள்

கோவை: கோவை, சிவானந்தா காலனியை சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் சோமசுந்தரம், 58, சாய்பாபா காலனியில், நகைக்கடை நடத்தி வரும் பாலவெங்கடேஷ், 50, ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இருவரும் அதில் மொத்தமாக, '5.5 கிலோ நகையை மிரட்டி பறித்தனர்' என, தெரிவித்திருந்தனர். உரிய தீர்வு வழங்க, இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரியிருந்தனர். இரு மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம், வழக்கு பதிய, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி, முத்துகுமார், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மீது, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்