உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டி: விக்கெட் வீழ்த்திய வீரர்கள்

சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டி: விக்கெட் வீழ்த்திய வீரர்கள்

கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) சார்பில் இரண்டாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், ஆர்.கே.எஸ்., கல்வி நிலையம் நிறுவன கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. ஜாலி ரோவர்ஸ் அணியினர், 42 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 172 ரன்கள் எடுத்தனர். வீரர் பவன்ஸ்ரீ, 40 , சுஜித், 45 ரன் எடுத்தனர். அடுத்து விளையாடிய ஆர்.கே.எஸ்., கல்வி நிலையம் நிறுவனம் அணியினர், 42 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 167 ரன் எடுத்தனர். வீரர்கள் பார்த்திபன், 32 ரன், அஷ்வின் பாபு, 35 ரன் எடுத்தனர். எதிரணி வீரர்கள் நரேன் கார்த்திகேயன் மற்றும் நித்வின் ஆகியோர் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர். மழை காரணமாக, 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நான்காவது டிவிஷன் போட்டியில், தம்பி மெமோரியல் கிரிக்கெட் கிளப் அணியும், எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. பேட்டிங் செய்த தம்பி மெமோரியல் அணியினர், 30.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 106 ரன் எடுத்தனர். எதிரணி வீரர்கள் சண்முகசுந்தரன் நான்கு விக்கெட்களும், தமிழன்பன் மூன்று விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து களம் இறங்கிய எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர், 28.5 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 109 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் முத்தையா மூன்று விக்கெட் வீழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை