சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெ;ட் ஐந்து விக்கெட் வீழ்த்தி அபாரம்
கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) சார்பில், இரண்டாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. விஜய் கிரிக்கெட் கிளப் அணியும், ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. விஜய் கிரிக்கெட் கிளப் அணியினர், 43.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 139 ரன் எடுத்தனர். வீரர் பிரபுகுமார், 39 ரன் எடுத்தார். எதிரணி வீரர் ஸ்ரீராம் மூன்று விக்கெட் வீழ்த்தினார். ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர், 41.1 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 140 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். வீரர் ஸ்ரீஹரி, 40 ரன் எடுத்தார். சீ லயன் ரெயின்போ 1972 எம்.எம்.சி.சி., அணியும், ஆர்.கே.எஸ்., கல்வி நிலையம் அணியும் மோதின. சீ லயன் ரெயின்போ அணியினர், 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 164 ரன் எடுத்தனர். வீரர் சுகேந்திரன், 81 ரன், சச்சின், 32 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் ஹரிஹரன் ஐந்து விக்கெட் வீழ்த்தினார். ஆர்.கே.எஸ்., கல்வி நிலையம் அணியினர், 48.1 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 165 ரன் எடுத்தனர். வீரர் பார்த்திபன், 50 ரன், ரித்விக், 48 ரன் எடுத்தனர். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.