உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி.டி.சி.ஏ. டிவிஷன் கிரிக்கெட்; தலா 3 விக்கெட் வீழ்த்திய ஐவர்

சி.டி.சி.ஏ. டிவிஷன் கிரிக்கெட்; தலா 3 விக்கெட் வீழ்த்திய ஐவர்

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.) சார்பில் மூன்றாவது டிவிஷன் போட்டி, பி.எஸ்.ஜி. எஸ்.ஆர்.ஐ.ஐ. உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. சச்சின் கிரிக்கெட் கிளப் அணியும், கோவை லெஜண்ட்ஸ் கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த, சச்சின் கிரிக்கெட் கிளப் அணியினர், 50 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 195 ரன் எடுத்தனர். தினேஷ், 74 ரன், ஆகாஷ் சந்திரன், 46 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் நரசிம்மன் மூன்று விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களம் இறங்கிய கோவை லெஜண்ட்ஸ் அணியினர், 41.5 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 196 ரன் எடுத்தனர். வீரர்கள் சிபி சுதர்சன், 71 ரன், நரசிம்மன், 64 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் தினேஷ் மூன்று விக்கெட் வீழ்த்தினார். நான்காவது டிவிஷன் போட்டியில் மிரேக்கில் கிரிக்கெட் கிளப் அணியும், ஆர்.பி. குரூப்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த மிரேக்கில் அணியினர், 43.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 126 ரன் எடுத்தனர். வீரர்கள் சம்பத்குமார், 34 ரன், கிஷோர் குமார், 32 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் கார்த்திக் மூன்று விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களம் இறங்கிய ஆர்.பி. குரூப்ஸ் அணியினர், 29.4 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு, 127 ரன் எடுத்தனர். வீரர் அஷ்வந்த் 'அவுட்' ஆகாமல், 57 ரன் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். ஆறாவது டிவிஷன் போட்டியில், எம்.எம். கிரிக்கெட் கிளப் அணியும், ஆரிஜின் ரீஜனல் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த எம்.எம். கிரிக்கெட் கிளப் அணியினர், 48 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 157 ரன் எடுத்தனர். வீரர்கள் ரமேஷ் சந்தர், 40 ரன் எடுத்தார். எதிரணி வீரர்களான ஸ்ரீவரதனா, ஜனார்த்தன் பாலாஜி ஆகியோர் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய ஆரிஜின் அணியினர், 19.3 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு, 159 ரன் எடுத்தனர். வீரர் அகஸ்டின் சேவியர், 84 ரன் எடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை