உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்

வடவள்ளி; பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில், ஆதரவற்றவர்களுடன் தீபாவளி கொண்டாட்டம், வடவள்ளியில் உள்ள சேவாஸ்ரமத்தில் நேற்று நடந்தது. இதில், ஆஸ்ரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான மளிகை பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள், பட்டாசுகள், இனிப்புகள், புத்தாடைகள் உள்ளிட்டவைகள் வழங்கினர். தொடர்ந்து, ஒருவருக்கொருவர் இனிப்புகளை பறிமாறிக்கொண்டு, ஆதரவற்ற குழந்தைகளுடன் சேர்ந்து, பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். முன்னதாக, மருதமலை அடிவாரத்தில் உள்ள உதவும் கரங்கள் இல்லத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு தேவையான பொருட்களையும் வழங்கினர்.இதில், பாரத மாதா நற்பணி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கவுரிசங்கர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை