சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆண்டு விழா
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கிளையின், 85 வது ஆண்டு விழா வங்கியில் நடைபெற்றது. பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா, நகராட்சி கமிஷனர் கணேசன் ஆகியோர் பேசினர். பொள்ளாச்சி கிளை மேலாளர் புனிதவள்ளி வரவேற்றார்.கோவை மண்டல மேலாளர் ஜோதிபிரகாஷ் பேசுகையில், ''கடந்த, 1911ம் ஆண்டு இந்தியர்களால் இந்தியாவில் துவங்கப்பட்ட வங்கி, சேமிப்பு கணக்கை அறிமுகப்படுத்தியது. கடன் அட்டை வழங்கியது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் வளர காரணமாக இருந்துள்ளது. வங்கியில் கடன் பெற்று திருப்பி தரும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கிறோம்,'' என்றார்.தென்சங்கம்பாளையம் கிளை மேலாளர் ஜெயபிரதா, விழாவை தொகுத்து வழங்கினார். கோவை மண்டல அதிகாரிகள் அருண், பார்த்தன், சொக்கனுார் கிளை மேலாளர் புருேஷாத்தமன் பங்கேற்றனர். கிளை உதவி மேலாளர் சிவநந்தினி, உதவி மேலாளர் தீபா, ராமலட்சமி, வேளாண் அதிகாரி பத்மா மற்றும் வங்கி ஊழியர்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.