கராத்தே பெல்ட் தேர்வு மாணவர்களுக்கு சான்றிதழ்
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி இண்டர்நேஷனல் சின்டோகான் கராத்தே பள்ளி சார்பில், ஆறு மாதகாலமாக மாணவ, மாணவியருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கராத்தே 'பெல்ட்' தேர்வு, பொள்ளாச்சி சி.டி.சி., மேடு அருகே நடந்தது.அதில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மஞ்சள் நிற பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.நேஷனல் சின்டோகான் காரத்தே பள்ளியின், இந்திய தலைமை பயிற்சி ஆசிரியர் சிகான் பஞ்சலிங்கம், பயிற்சியாளர்கள் சென்சாய் வீரமுத்து, செம்பாய் தில்லை குமரவேல் ஆகியோர் பயிற்சி அளித்து மாணவர்களை தேர்வு செய்தனர். பொள்ளாச்சி வடக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா, மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.