மேலும் செய்திகள்
தொடர் செயின் பறிப்பு சென்னை இளைஞர் கைது
27-May-2025
கோவை : சிங்காநல்லுார், இருகூர் பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம், 80; இவர் கடந்த, 10ம் தேதி மாலை நடை பயிற்சி மேற்கொண்டு இருந்த போது, இருகூர் முத்துராமலிங்க தேவர் வீதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், அவர் கழுத்தில் அணிந்திருந்த நான்கு சவரன் செயினை பறித்து சென்றார்.புகாரின்படி, சிங்காநல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். செயின் பறிப்பில் ஈடுபட்டவரை பிடிக்க, அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து, இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர்.அதில் செயின் பறித்துச் சென்றது, சென்னை பெரம்பூர் திரு.வி.க., நகரை சேர்ந்த முகமது சாதிக், 31 என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று அவர் இருகூர் பகுதியில் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வரும் வழியில், இருகூரில் உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்து தப்ப முயன்றார். அப்போது அவரின் காலில் அடிபட்டது. அவரை போலீசார் பிடித்து, கோவை அரசு மருத்தவமனையில் அனுமதித்தனர்.பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முகமது சாதிக் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் செயின் பறிப்பு, வழிப்பறி, கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
27-May-2025