உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செயின் பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது

செயின் பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை; செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். கோவை மாவட்டம், பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் செயின் பறிப்பு வழக்கில், விஷ்ணு, 29 என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன், கலெக்டர் கிராந்திகுமாருக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இதுகுறித்த உத்தரவு சிறையில் உள்ள விஷ்ணுவிடம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ