உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லேசான மழைக்கு வாய்ப்பு; வேளாண் பல்கலை தகவல்

லேசான மழைக்கு வாய்ப்பு; வேளாண் பல்கலை தகவல்

கோவை; கோவையில் வரும் 17ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வேளாண் காலநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, வேளாண் பல்கலையில் உள்ள வேளாண் காலநிலை ஆய்வு மைய தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கை: வரும் 17ம் தேதி வரை கோவை மாவட்டத்தில், லேசான மழை பெய்யக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 10 முதல் 20 கி.மீ., வரை இருக்கும். 30 நாட்கள் வயதுடைய நெல்லுக்கு மேலுரம் இடுவதைத் தவிர்க்கவும். ஆடிப்பட்டம் மக்காச்சோளத்தை, இறவையில் விதைக்க உகந்த காலம். தக்காளியில் தண்டு அழுகல் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். புடலை, பாகல், பீர்க்கு, பூசணி, வெள்ளரி, சுரைக்காய் போன்றவற்றை சாகுபடி செய்ய நல்ல தருணம். 60 நாட்களான மஞ்சளுக்கு உரமிடலாம். கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பில்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை