உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை - நாகர்கோவில் உட்பட 5 ரயில்களின் சேவையில் மாற்றம்

கோவை - நாகர்கோவில் உட்பட 5 ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, கோவை - நாகர்கோவில் உட்பட, ஐந்து ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை: மதுரை ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன  கோவை - நாகர்கோவில் காலை 8:00 மணி ரயில், இன்று முதல் 23ம் தேதி வரை, திண்டுக்கல் வரை இயக்கப்படும்  ஈரோடு - செங்கோட்டை மதியம் 2:00 மணி ரயில், வரும் 27, 28, 29, 30ம் தேதிகளில், திண்டுக்கல் வரை இயக்கப்படும்  செங்கோட்டை - ஈரோடு காலை 5:10 மணி ரயில், வரும் 28, 29, 30, 31ம் தேதிகளில், திண்டுக்கலில் இருந்து இயக்கப்படும்  திருச்சி - ராமேஸ்வரம் காலை 7:05 மணி ரயில், வரும் 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 25, 26, 28ம் தேதிகளில் மானாமதுரை வரை இயக்கப்படும்  ராமேஸ்வரம் - திருச்சி மாலை 3:00 மணி ரயில், வரும் 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 25, 26, 28ம் தேதிகளில் மானாமதுரையில் இருந்து இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி