உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேம்பாலப்பணிகளால் ரயில்கள் இயக்கம் மாற்றம்

மேம்பாலப்பணிகளால் ரயில்கள் இயக்கம் மாற்றம்

கோவை : ரயில்வே மேம்பாலத்தில், இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி நடப்பதால், ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.பாலக்காடு - சொரனுார் இடையே ஒத்தப்பாலம் - மன்னனுார் ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே மேம்பாலத்தில் உள்ள இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, சொரனுார் - கோவை (06458) ரயில், மற்றும் கோவை - சொரனுார் (06459) ரயில்கள் நாளை (அக்., 8) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோவை - மங்களூர்(22610) இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், கோவையிலிருந்து நாளை, காலை, 6:00 மணிக்கு பதில், காலை 8:30 மணிக்கு புறப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை