மேலும் செய்திகள்
மாயாண்டி சித்தர் குரு பூஜை விழா
22-Dec-2024
அன்னுார்; அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா இன்று (3ம் தேதி) துவங்குகிறது.அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் 25ம் ஆண்டு தேர்த்திருவிழா இன்று, காலை 10:00 மணிக்கு, கிராம தேவதை வழிபாட்டுடன் துவங்குகிறது. சின்னம்மன், பெரிய அம்மன் கோவிலில் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடைபெறுகிறது.அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7:00 மணிக்கு கிராம சாந்தி பூஜை நடைபெறுகிறது. நாளை (4ம் தேதி) காலை 6:00 மணிக்கு, கணபதி ஹோமமும், காலை 8:00 மணிக்கு கொடியேற்றமும் நடக்கிறது.வரும் 9ம் தேதி காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மாலை 7 :00 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.வருகிற 10ம் தேதி காலை 10:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. மடாதிபதிகள், அறநிலையத்துறை, அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
22-Dec-2024