மேலும் செய்திகள்
அரங்கநாதர் கோவிலில் விசு புண்ணிய காலம் வைபவம்
18-Oct-2024
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நகைகள், கோவிலில் தினமும் பயன்படுத்தப்படும், வெள்ளி மற்றும் பித்தளை பாத்திரங்கள் ஆகியவை சரிபார்த்து, ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை வசூல் ஆகிறது. மேலும் உண்டியலில் பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.இந்த நகைகள் மற்றும் கோவிலில் தினமும் பயன்படுத்தும் வெள்ளி மற்றும் பித்தளை பாத்திரங்கள், நகைகள் சரி பார்க்கும் பணிகள், காரமடை கோவிலில் நேற்று நடந்தது. கோவை ஹிந்து சமய அறநிலைத்துறை துணை கமிஷனர் விஜயலட்சுமி தலைமையில், காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் சந்திரமதி முன்னிலையில், இந்த பணிகள் நடந்தன.
18-Oct-2024