உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெப்ப அலை வீசுவதால் கோழிகள் இறப்பு அதிகரிப்பு

வெப்ப அலை வீசுவதால் கோழிகள் இறப்பு அதிகரிப்பு

- நமது நிருபர் -வெப்பத்தால் கோழிகள் இறப்பு அதிகரித்துள்ளது. இதனால், பண்ணையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆடி, ஆவணி மாதங்களில் மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. சில இடங்களில் லேசான மழை பெய்தாலும் கோடை காலத்தைப் போல கடும் வெப்பம் நிலவுகிறது. எனவே பகல் வேலைகளில் வெப்ப அலை வீசத் துவங்கியுள்ளது. இது கோழிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாமல், கோழிகளின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. கோழி பண்ணையை சுற்றி மரங்களை நட்டு பசுமையாக்க முயன்றாலும் அதையும் தாண்டி வெப்ப அலை வீசுகிறது. இறப்பு விகிதத்தை குறைக்க பண்ணையாளர்கள் மேற்கூரைகள் மீது தண்ணீர் தெளிப்பு அமைப்பு, உட்புறங்களில் பனித்தூவான் உள்ளிட்ட முறைகளில் வெப்பத்தை குறைக்க தண்ணீரை தூறல் மழை போல் பெய்ய வைக்கின்றனர். ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள கோழிப்பண்ணையாளர்களுக்கு இது மேலும் சுமையை அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் அதிகரிப்பது பண்ணையாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. விரைவில் நல்ல மழை பெய்து குளிர்ச்சியான காலநிலை நிலவினால், கோழிகளின் இறப்பு விகிதம் குறையும். இதனால் பண்ணையாளர்களுக்கு லாபம் அதிகரிக்கும். எனவே பண்ணையாளர்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !