உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதல்வர் கவனத்துக்கு... மத்திய சிறை எப்போது மாற்றப்படும்?

முதல்வர் கவனத்துக்கு... மத்திய சிறை எப்போது மாற்றப்படும்?

கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறையை வேறிடத்துக்கு மாற்றி விட்டு, அப்பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். முதல்கட்டமாக, 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா பேஸ்-1 பணி நடந்து வருகிறது; அதை முதல்வர் இன்று கள ஆய்வு செய்கிறார். மத்திய சிறையை மாற்றியதும், மீதமுள்ள இடங்களில், செம்மொழி பூங்கா பேஸ்-2 பணி செயல்படுத்தப்படும் என அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பேசியிருந்தார்.அதன்படி, காரமடை அருகே பிளீச்சிக்கு மாற்றம் செய்வது தொடர்பாக, கடந்தாண்டு அக்., மாதம் கோவையில் உள்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். காந்திபுரத்தில் தற்போதுள்ள சிறை வளாகம் போலவே சதுர வடிவில் அமைக்க, பூமி தான நிலத்துக்கு அருகாமையில் உள்ள, 38 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. அதில், 30 ஏக்கர் நிலத்துக்கு, அரசுக்கு சொந்தமான நிலத்தை, மாற்று இடமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.மீதமுள்ள எட்டு ஏக்கர் மற்றும் சாலை வசதி ஏற்படுத்த இரண்டு ஏக்கர் என, 10 ஏக்கர் நிலம், விலை கொடுத்து வாங்க வேண்டும். இதற்கு மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. பல மாதங்களுக்கு மேலாகியும், தமிழக அரசு இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறது. அதிகாரிகளிடம் விசாரித்தால், மத்திய சிறையை பிளீச்சிக்கு மாற்றுவது தொடர்பாக திட்ட அறிக்கையை அரசுக்கு அனுப்பி விட்டோம் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை