உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிழல் தரும்... நீர் தரும் மரங்களை வளர்க்க களமிறங்கிய குழந்தைகள்

நிழல் தரும்... நீர் தரும் மரங்களை வளர்க்க களமிறங்கிய குழந்தைகள்

கோவை: கோவையில் நிழல் தரும் நீர் தரும் மரங்களை வளர்க்கும் நோக்கத்தில், இஸ்லாமி ஹிந்த்- குழந்தைகள் அமைப்பு களம் இறங்கி உள்ளது.ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்- குழந்தைகள் அமைப்பு சார்பில், 'மண்ணிலே கரங்கள், இந்தியாவோடு இதயங்கள்' என்ற கருத்தை மையமாக கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரசாரம் வரும், 25ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து, இஸ்லாமி ஹிந்த்- குழந்தைகள் அமைப்பின், கோவை மாவட்டத் தலைவர் நபீளா கரம் கூறியிருப்பதாவது: இந்த அமைப்பு, 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளை நல்வழிப்படுத்தும் அமைப்பாகும். நல்ல செயல்களையும், சிந்தனைகளையும், குழந்தைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது.இந்த தலைமுறையினருக்கு நிழலும், நீரும் கிடைக்க வேண்டும். சாலைகளை விரிவுபடுத்தவும், கிராமங்களை நகரமாக மாற்றவும் ,அதிக மரங்கள் வெட்டப்படுகின்றன.மரங்களை வெட்டிக் கொண்டே இருப்பதால், இயற்கை சமநிலை மாறி வருகிறது. நமக்கு ஆக்ஸிஜன் தரும், மழை தரும், பறவைகளுக்கு வாழ்விடம் தரும் மரங்களை, நாம் வளர்க்க வேண்டும்.இந்த பிரசாரத்தின் வாயிலாக மக்களிடமும், குழந்தைகளிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம். தொடர்ந்து செயல்பட, அதற்கான திட்டங்களை உருவாக்கி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.மரங்களை வெட்டிக் கொண்டே இருப்பதால், இயற்கை சமநிலை மாறி வருகிறது. நமக்கு ஆக்ஸிஜன் தரும், மழை தரும், பறவைகளுக்கு வாழ்விடம் தரும் மரங்களை, நாம் வளர்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை