குழந்தைகள் தின கொண்டாட்டம்
கோவை ; அரசு, தனியார் பள்ளிகளில் பூக்கள் வழங்கியும், கேக் வெட்டியும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.நாட்டின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த தினமான நவ., 14 தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. நேற்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கு பூக்கள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, வகுப்பறைகளில் கேக் வெட்டியும், இனிப்புகள் மற்றும் சிறு பரிசுகள் வழங்கியும் கொண்டாடினர். சில பள்ளிகளில் மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. குழந்தைகள் பல்வேறு வேடங்களில் பார்வையாளர்களை கவர்ந்தனர். பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் சீருடை அணியாது பாரம்பரிய உடை அணிந்து பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.