உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எப்., அலுவலகம் திறக்க சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்

பி.எப்., அலுவலகம் திறக்க சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்

வால்பாறை: வால்பாறையில், பி.எப்.,அலுவலகம் திறக்க வேண்டும் என சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வால்பாறை தாலுகா சி.ஐ.டி.யு., தொழிற்சங்க பொதுச்செயலாளர் பரமசிவம், பொள்ளாச்சி எம்.பி.,க்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்னைகளுக்கு கோவைக்கு சென்றால், அதிகாரிகள் உரிய முறையில் பதில் கூறுவதில்லை. இதனால், தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். சில நேரங்களில், வேறு வழியின்றி இடைத்தரகர்கள் வாயிலாக சென்று தொழிலாளர்கள் பணத்தையும் இழக்கின்றனர். தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், வால்பாறையில் வருங்கால வைப்பு நிதி கிளை அலுவலகம் திறக்க வேண்டும். மாதம் தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்த வேண்டும். கோவை அலுவலகத்தில் வால்பாறைக்கு தனி 'கவுன்டர்' திறக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை