மேலும் செய்திகள்
சிட்டி கிரைம் செய்தி
02-Sep-2024
சரவணம்பட்டி சின்ன வேடம்பட்டி பகுதியில், 2 வீடுகளில் சூதாட்டம் நடப்பதாக, சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சீட்டாட்டத்தில் ஈடுபட்ட, 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3.48 லட்சம், கார், பைக், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதேபோல் மற்றொரு வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட, 18 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.52 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.--சிறுவன் உட்பட 2 பேர் கைதுவெள்ளலுார் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் நாகூர் மொய்தீன், 37; புரோட்டா மாஸ்டர். நேற்று முன்தினம் இவர் வீட்டுக்கு செல்ல, காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த, 2 பேர் நாகூர் மொய்தீனிடம் மொபைல் போனை மிரட்டி பறித்து தப்பினர். நாகூர் மொய்தீன் புகாரின் படி, காட்டூர் போலீசார் வழக்குப்பதிந்து சின்னதடாகத்தை சேர்ந்த, 17 வயது சிறுவன் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த மேகநாதன், 22, ஆகியோரை கைது செய்தனர். பணம் பறித்தவர் கைது
தெலுங்குபாளையம் சுப்பிரமணிய உடையார் வீதியை சேர்ந்தவர் மனோஜ், 24; தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம், அப்பகுதியில் உள்ள காலி இடத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், மனோஜை கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1400 மற்றும் மொபைல் போனை பறித்து தப்பி சென்றார். மனோஜ் புகாரின் படி, செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்து, தெலுங்குபாளையம் சிவசக்தி நகரை சேர்ந்த ரஞ்சித் குரு, 39, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
02-Sep-2024