உள்ளூர் செய்திகள்

சிட்டி கிரைம் 

எரிந்து நாசமான டெபாசிட் ரசீது

சிங்காநல்லுார், லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சகுந்தலா, 71. இவர் நேற்று முன்தினம், காலை வீட்டு அருகில் உள்ள ஒரு முருகன் கோவிலுக்கு சென்றார். மதியம் வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டிற்குள் இருந்து புகை வந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டிற்குள் சென்று தீயை அணைத்தார். இந்த தீ விபத்தில் மூதாட்டி வைத்திருந்த, ரூ. 8 லட்சத்துக்கான டெபாசிட் ரசீது எரிந்து நாசமானது. சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பெண்ணுக்கு விபத்து

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிசியா போரா, 33. இவர் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த 11ம் தேதி காலை, மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக ஜிசியா போரா மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்தார். அவரின் தலையின் பின் பகுதியில், பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அதே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை