மேலும் செய்திகள்
சிட்டி கிரைம் செய்திகள் கோவை_சிட்டி
23-May-2025
ஆர்.எஸ்.புரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட, பூமார்க்கெட் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது, அப்பகுதியில் சட்ட விரோதமாக 'பிளாக்கில்' மதுபானம் விற்பனை நடப்பது தெரியவந்தது. மது விற்பனை செய்த புதுக்கோட்டையை சேர்ந்த ரமேஷ்ராஜா, 28 என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து, 39 பாட்டில்கள் மற்றும் ரூ.6360 பணம் பறிமுதல் செய்தனர்.இது போல், செல்வபுரம் பகுதியில் பேரூர் சாலையில், உள்ள தனியார் இடத்தில் மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜா, 46 என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து, 30 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவரையும், போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பேக்கரியில் திருட்டு
கணபதி, சத்தி சாலையை சேர்ந்தவர் சிதம்பரம், 69; அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி பேக்கரியை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை பேக்கரியை திறக்க வந்த போது, ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது. கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.07 லட்சம் பணம் திருட்டு போயிருந்தது. சிதம்பரம், சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சாலை விபத்தில் மாணவர் பலி
தஞ்சாவூரை சேர்ந்தவர் பிரனேஷ், 20. இவர் கோவையில் தங்கியிருந்து, குரும்பப்பாளையம் பகுதியில் உள்ள கல்லுாரியில், மூன்றாமாண்டு, இன்ஜி., படித்து வந்தார். நேற்று முன்தினம் தனது பைக்கில், சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர்., சாலையில், சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பிரனேஷ் பைக் மீது மோதியது. நிலை தடுமாறி கீழே விழுந்த பிரனேஷ்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
23-May-2025