உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிவில் ஸ்டேடஸ் அந்தஸ்து தபால் ஊழியர்கள் தீர்மானம்

சிவில் ஸ்டேடஸ் அந்தஸ்து தபால் ஊழியர்கள் தீர்மானம்

பொள்ளாச்சி : எட்டு மணி நேர வேலை மற்றும் சிவில் ஸ்டேடஸ் அந்தஸ்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.பொள்ளாச்சி கோட்டம், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின், 13வது கோட்ட மாநாடு, தனியார் மண்டபத்தில் நடந்தது. கோட்ட தலைவர் சாந்தி தலைமை வகித்தார். கோவை மேற்கு மண்டல செயலாளர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ராமசாமி, மாநாட்டை துவக்கி வைத்தார்.முன்னதாக, கோட்ட உதவிச்செயலாளர் சிவதாசன் வரவேற்றார். அமைப்புச் செயலாளர் நாராயணசாமி விளக்கிப்பேசினார்.மாநாட்டில், 8 மணி நேர வேலை மற்றும் சிவில் ஸ்டேடஸ் அந்தஸ்த தர வேண்டும். ஊக்கத்தொகை அல்லது கமிஷன் வழங்கப்படுவதை கைவிட்டு, வேலைப்பளுவில் சேர்க்க வேண்டும். எஸ்.டி.பி.எஸ்., திட்டத்தை மாற்றி, யுனிபைடு பென்ஷன் திட்டத்தில் இணைக்க வேண்டும்.ஜி.டி.எஸ்., ஊதிய நிர்ணயம் மற்றும் பணி வரன்முறைகளை ஆராய, 8வது ஊதியக் குழுவில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கோட்டச்செயலாளர் சுருளிவேல், பொருளாளர் முஸ்தபா, மகிளா கமிட்டி தலைவர் கவுசல்யா, செயலாளர் மாதவி, பொருளாளர் சத்தியகலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை