மேலும் செய்திகள்
கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் சிறையிலடைப்பு
05-May-2025
கோவை; ரத்தினபுரி பகுதியில் இடப்பிரச்னையில் மோதிக்கொண்ட ஒரே குடும்பத்தைசேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்தவர் சாந்தாமணி, 40. அதே பகுதியில் சாந்தாமணியின் உறவினர் ரேவந்த் குமார், 30 என்பவரும் வசித்து வருகிறார்.ஒரு மாதத்திற்கு முன், சாந்தாமணி, ரேவந்த் குமார் குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்களின் உறவினர் ஒருவர் வீட்டு துக்க நிகழ்வுக்காக சென்றனர். அங்கு குடும்பத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இருதரப்பையும் உறவினர்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர். இந்நிலையில், கடந்த 13ம் தேதி, சாந்தாமணி, அவரது அவரது கணவர் கணேசன்,42, உறவினர் கனகராஜ் 26, ஆகியோர் ரத்தினபுரி, தங்கம் நகரில் உள்ள ரேவந்த் குமார் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த ரேவந்த் குமார் சாந்தாமணியை சாரமாரியாக தாக்கினார். பதிலுக்கு, கணேசன், கனகராஜ், ஆகியோர் ரேவந்த் குமாரை தாக்கினார்.சம்பவம் குறித்து சாந்தாமணி மற்றும் ரேவந்த் குமார் ஆகியோர் ரத்தினபுரி போலீசில் அளித்த புகாரில் ரேவந்த் குமார், கணேசன், கனகராஜ் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
05-May-2025