செம்மொழி நாள் விழா போட்டி அறிவிப்பு
கோவை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட அளவிலான செம்மொழி நாள் விழா, போட்டிகள் நடைபெறவுள்ளன.இந்த போட்டிகளில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், அனைத்து துறை சார்ந்த அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்.பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், மே 5ம் தேதி கோவை துணிவணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் மே 10ம் தேதி நடைபெறவுள்ளன.வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்படவுள்ளன. முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும். போட்டிகள் மற்றும் பிற விவரங்களுக்கு, 89034 12685 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.