உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன்னுாரில் நடந்த துாய்மை பாரத விழா

அன்னுாரில் நடந்த துாய்மை பாரத விழா

அன்னுார்: ஊரக வளர்ச்சித்துறை மற்றும் காட்டம்பட்டி தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், பள்ளி வளாகத்தில், துாய்மை பாரத விழா நடந்தது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் அப்துல் வஹாப், காட்டம்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் துாய்மை காவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். பல்வேறு வகையான மரக்கன்றுகள், பள்ளி வளாகத்தில் நடப்பட்டன. ஓவிய ஆசிரியர் பார்த்தசாரதி உதவியுடன், காந்தி படங்களையும், சுவர் ஓவியங்களையும் மாணவர்கள் வரைந்தனர். கவுரவ விரிவுரையாளர் கருணாநிதி, ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். முன்னாள் ஊராட்சி துணை தலைவர் லட்சுமி காந்தன், சமூக ஆர்வலர் மணிகண்டன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஆனந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ