உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏல விற்பனையில் தேங்காய் விலை குறைந்தது

ஏல விற்பனையில் தேங்காய் விலை குறைந்தது

அன்னுார்; அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஒவ்வொரு வாரமும், புதன்கிழமை ஏல விற்பனை நடைபெறுகிறது. நேற்று ஏலத்தில் தேங்காய் ஒரு கிலோ குறைந்தபட்சம் 47 ரூபாய் முதல், அதிகபட்சமாக 49 ரூபாய் வரை விற்பனையானது.தேங்காய் கடந்த வாரம், அதிகபட்சம் 50 ரூபாய்க்கும், இரு வாரங்களுக்கு முன் அதிகபட்சமாக 55 ரூபாய் 60 பைசாவுக்கும் விற்பனையானது. கடந்த இரு வாரங்களில் தேங்காய் கொள்முதல் விலை கணிசமாக குறைந்துள்ளது. தேங்காய் கொப்பரை குறைந்தது, ஒரு கிலோ 165 ரூபாய் 76 பைசா முதல், அதிகபட்சம் 176 ரூபாய் 80 பைசாவுக்கு விற்பனையானது.இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை