உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன்னுார் ஏலத்தில் தேங்காய் விலை உயர்வு

அன்னுார் ஏலத்தில் தேங்காய் விலை உயர்வு

அன்னுார்; அன்னுாரில் ஏலத்தில் தேங்காய் விலை அதிகரித்தது. அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று வேளாண் விளைபொருட்கள் ஏல விற்பனை நடந்தது. ஏலத்திற்கு 14 ஆயிரத்து 130 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்சம் 63 ரூபாய் 39 பைசா முதல், அதிகபட்சம் 72 ரூபாய் 50 பைசா வரை விற்பனையானது. கடந்த நான்கு வாரங்களை விட தேங்காய் விலை அதிகரித்துள்ளது. இத்தகவலை கோயம்புத்தூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ