உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராணுவ தளவாட உபகரண உற்பத்தி தயார்; நிலையில் கோவை நிறுவனங்கள்

ராணுவ தளவாட உபகரண உற்பத்தி தயார்; நிலையில் கோவை நிறுவனங்கள்

கோவை; போர் பதற்றம் தணிந்து விட்டாலும், பாதுகாப்புத் துறைக்கான உபகரண உற்பத்தியை துரிதப்படுத்த எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக, கோவை தொழில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, இந்தியா பதிலடி கொடுத்ததை அடுத்து, இந்தியா - பாக்., இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க இயலாமல், பாக்., தரப்பு சமரச பேச்சுக்கு முன்வந்துள்ளது.இந்நிலையில், இந்திய பாதுகாப்புத் துறைக்கு, உபகரண உற்பத்தி செய்து தரும் கோவை நிறுவனங்கள், எந்த அவசரகால நிலைக்கும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன.கோவையில் இருந்து ஏராளமான நிறுவனங்கள், ராணுவ பாதுகாப்பு தளவாட உபகரண உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்நிறுவனங்கள், மத்திய அரசின் தேவையைப் பூர்த்தி செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளன.இதுதொடர்பாக, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க (டான்ஸ்டியா) துணைத்தலைவர் சுருளிவேல் கூறுகையில், “மேக் இன் இந்தியா திட்டத்தில், பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்கள் இறக்குமதி குறைக்கப்பட்டு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து, பாதுகாப்புத் துறைக்கு உபகரணங்கள் உற்பத்தி செய்து தரப்படுகின்றன. அனைத்து தொழில் நிறுவனங்களும், மத்திய அரசுக்கு ஆதரவாக உள்ளோம். என்ன அவசரம் என்றாலும், என்ன தேவை என்றாலும் உடனடியாக செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை