கோவை டைஸ் பொதுக்குழுவில் பிப்., மாதம் போட்டி நடத்த முடிவு
கோவை; இன்ஜி., கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டிகளை, கோவை 'டைஸ்' குழு நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் கோவை மாவட்டத்தில் உள்ள இன்ஜி., கல்லுாரிகள் இடையே கால்பந்து, பேட்மின்டன் உள்ளிட்ட போட்டிகள் ஐந்து நாட்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், கோவை 'டைஸ்' குழுவின், 2025-26க்கான பொதுக்குழு கூட்டம், சி.ஐ.டி., கல்லுாரி வளாகத்தில் நடந்தது. அடுத்தாண்டு பிப்., மாதம் மூன்றாவது வாரத்தில் கோவை டைஸ், 2025-26ம் ஆண்டுக்கான போட்டிகள் நடத்த, ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. செயலாளர், தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் தலைமையில் கூட்டம் நடந்தது. சி.ஐ.டி., கல்லுாரி முதல்வர் ராஜேஷ்வரி முன்னிலையில், உடற்கல்வி இயக்குனர் மணிகண்டன் உட்பட பல்வேறு இன்ஜி., கல்லுாரிகளின் உடற்கல்வி இயக்குனர்கள் பங்கேற்றனர்.