கோவை டி.ஐ.ஜி., பணியிட மாற்றம்
கோவை: கோவை டி.ஐ.ஜி., சசிமோகன், திண்டுக்கல் லுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கோவை டி.ஐ.ஜி.,யாக பணிபுரிந்த சசிமோகன் நேற்று திண்டுக்கல்லுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திண்டுக்கல் டி.ஐ.ஜி., சாமிநாதன் நியமிக்கப்பட் டுள்ளார்.