உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி.ஐ.டி., கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நுழைவாயில் அலங்கார வளைவு திறப்பு

சி.ஐ.டி., கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நுழைவாயில் அலங்கார வளைவு திறப்பு

கோவை : கோவை, சி.ஐ.டி., கல்லூரியில் 1982 முதல் 1986 வரை இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது.விழாவில், முன்னாள் மாணவர் சப்தரிஷி வரவேற்றார். நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து ஸ்ரீபிரசாத் பேசினார். கல்லூரி தாளாளர் பிரசாத், செயலாளர் பிரபாகர் ஆகியோர் தலைமை வகித்தனர். 1986ல் முதல்வராக பணியாற்றிய குருசாமி, தற்போதைய முதல்வர் செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோவை மாவட்ட கலெக்டர் கருணாகரன் பேசியதாவது:கல்லூரி படிப்பு முடித்து 25 ஆண்டுகள் கடந்த நிலையில் கல்லூரி பருவத்தில் கொண்டிருந்த அதே துடிப்புடன் மாணவர்கள் ஒன்றுபட்டு தங்களின் கல்லூரி நுழைவாயில் அலங்கார வளைவை கட்டி கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தில் பல அதிநவீன வளர்ச்சி காணப்படுகிறது. இத்தகைய வளர்ச்சிக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். நாட்டில் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் பண்பாடு மற்றும் கலாசாரத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. நமது நாடு கொண்டிருக்கும் பண்பாடு மற்றும் கலாசாரத்தை இந்நாள் வரை பாதுகாத்து வந்துள்ளோம். வளர்ச்சி என்பது தேவையான ஒன்றுதான். எனினும் நாட்டின் வளர்ச்சிக்காக கலாசாரம் மற்றும் பண்பாடு பாதிக்கப்படுவது ஏற்புடையதல்ல. எதிர்காலத்தில் வாழ்வில் எத்தகைய வளர்ச்சி பெற்றாலும் நம் நாட்டின் கலாசாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற முனைப்புடன் அனைவரும் செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் 14 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கல்லூரி நுழைவாயில் அலங்கார வளைவை கலெக்டர் கருணாகரன் திறந்து வைத்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். முன்னாள் மாணவர்கள் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆன்டோ ஜார்ஜ் உள்பட முன்னாள் மாணவர் சங்கத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை