உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சப்பள்ளிக்கு கூடுதல் பஸ் இயக்குவதில் கஞ்சத்தனம் ஏனோ? குமுறும் பொதுமக்கள்

கஞ்சப்பள்ளிக்கு கூடுதல் பஸ் இயக்குவதில் கஞ்சத்தனம் ஏனோ? குமுறும் பொதுமக்கள்

அன்னூர் : நிற்காமல் செல்லும் பஸ்சால் கஞ்சப்பள்ளி மாணவ, மாணவியர் திண்டாடுகின்றனர்.கோவையிலிருந்து அன் னூர், கஞ்சப்பள்ளி வழியாக புதுப்பாளையத்திற்கு 45சி/ஏஆர்8 என்ற டவுன்பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ் காலை நேரத்தில் கஞ்சப்பள்ளியில் நிறுத்துவதில்லை என மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:இங்கு எட்டாம் வகுப்பு வரைதான் பள்ளி உள் ளது. ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரையிலும் மற்றும் கல்லூரிக்கு செல்லவும் அன்னூர் செல்ல வேண்டி உள்ளது.

காலையில் 8.30 மணிக்கு புதுப்பாளையத்திலிருந்து வரும் 45சி/ஏஆர்8 டவுன் பஸ் நிற்காமல் சென்று விடுகிறது. இதனால் ஒன்றரை கி.மீ., தொலைவில் உள்ள கஞ்சப்பள்ளி பிரிவுக்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ் ஏற வேண்டி உள்ளது. அங்கும் சில பஸ்கள் மட்டுமே நிறுத்தவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. புதுப்பாளையத்திலிருந்து கஞ்சப்பள்ளி வரும்போதே பஸ் நிரம்பி வழிகிறது. இதனால் காலையில் கஞ்சப்பள்ளிக்கு அன்னூரிலிருந்து கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.பஸ் போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில், 'புதுப்பாளையத்தில் பஸ் புறப்படும்போதே நிரம்பி விடுகிறது. வரும் வழியில் அல்லப்பாளையம் மற்றும் ருத்திரியம்பாளையத்தில் அதிக கூட்டம் ஏறி விடுகிறது.

கஞ்சப்பள்ளியில் நிறுத்தினால் மாணவர்கள் படிக்கு வெளியே தொங்கியபடி அபாய நிலையில் பயணம் செய்வார்கள்,' என்றனர். கஞ்சப் பள்ளி ஊராட்சி துணைத் தலைவர் ஆனந்தன் கூறுகையில், ''கஞ்சப்பள்ளிக்கு கூடுதல் டவுன்பஸ் விட வலியுறுத்தி இரண்டு முறை அவிநாசி ரோட்டில் மறியல் செய்தோம். கடந்த வாரம் ஒரு டவுன் பஸ்சை சிறைபிடித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. கோவையிலிருந்து அன்னூருக்கு இயங்கிவரும் எட்டு டவுன்பஸ்களில் ஒன்றை மட்டும் கஞ்சப்பள்ளி வரை காலை மற்றும் மாலையில் ஒரு டிரிப் இயக்கினால் பிரச்னை தீரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ