| ADDED : ஆக 09, 2011 02:49 AM
கோவை : கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அரசு அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில்(ஐ.டி.ஐ) சேர்க்கை நடைபெறுகிறது. இப்பயிற்சி நிலையத்தில் டர்னர், மெஷினிஸ்ட், மெக்கட்ரானிக்ஸ் உட்பட சுமார் 11 படிப்புகள் உள்ளன. பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் வரும் 30க்குள் அனைத்து இடங்களும் நிரப்பப்படும்.பயிற்சியில் சேரும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் உதவித் தொகை மற்றும் பஸ் பாஸ் வழங்கப்படும். பயிற்சியில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு, மத்திய அரசால் வழங்கப்படும் என்.சி.டி.வி., சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெறலாம். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு, கோவையில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களின் உதவியுடன் வளாக நேர்காணல் நடத்தப்பட்டு வேலை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 0422-2642041 என்ற போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை, அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.