உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.51 லட்சம் அபராதம் விதிப்பு கோவை விவசாயிக்கு அதிர்ச்சி

ரூ.51 லட்சம் அபராதம் விதிப்பு கோவை விவசாயிக்கு அதிர்ச்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, சேர்வக்காரன்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்; விவசாயி. இக்கிராமத்தில், இவருக்கு சொந்தமான விவசாய நிலம் இருக்கிறது.செங்கல் சூளைக்கு பயன்படுத்த விவசாய நிலத்தில் இருந்து மண் எடுத்ததாக கூறி, 51 லட்சத்து, நாற்பத்தி மூன்றாயிரத்து, 650 ரூபாய் அபராதம் விதித்து, பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயி முருகானந்தம், கோவை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிராந்திகுமாரிடம், அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமென முறையிட்டனர்.அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''எனது தோட்டத்தில் வாழை விவசாயம் செய்கிறேன். அருகாமையில் உள்ள ஓடையில் இருந்து தண்ணீர் வராமல் இருக்க, மண் போட்டு உயரப்படுத்தி உள்ளேன்.விவசாய மேம்பாட்டுக்காக மட்டுமே, மண் வெட்டி எடுத்து பயன்படுத்தினேன். செங்கல் சூளைக்கு கொடுக்கவில்லை. அபராத கடிதத்தில், 'செங்கல் சூளைக்கு செம்மண் வெட்டி எடுத்துச் சென்ற செயலுக்காக' என கூறப்பட்டுள்ளது. இது தவறானதாகும். எனக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ