உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை விழாவில் கோலமிட்டு வரவேற்பு அபார்ட்மென்ட், வீடுகளில் அசத்தல்

கோவை விழாவில் கோலமிட்டு வரவேற்பு அபார்ட்மென்ட், வீடுகளில் அசத்தல்

கோவை: கோவை விழாவை முன்னிட்டு, வீடுகளில் கோலமிட்டு விளக்கேற்றிக் கொண்டாட, 'தினமலர்' அழைப்பு விடுத்திருந்தது. மாநகரின் ஏராளமான பகுதிகளில் அபார்ட்மென்ட்களிலும், வீடுகளிலும் கோலமிட்டு கோவை விழாவை வரவேற்றனர்.நேரு நகர் 'மவுண்ட் ரெயின் டிராப்' அபார்ட்மென்டில், ஆர்த்தி, சிவரஞ்சனி, கமலாம்பிகை, பிருந்தா, சுகன்யா, உமாமகேஸ்வரி, ஸ்வேதா, மனோன்மணி, அபர்ணா, ஜெகதீஸ்வரி, சுதாமதி, நிரஞ்சனா, தனலஷ்மி, வேல்வடிவு, காயத்ரி, நித்யா, பிரதீபா, சித்ரா ஆகியோரின் கைவண்ணத்தில் பிரமாண்டமாக கோலம் உருவாகி இருந்தது.காவி பின்னணியில் பாரம்பரியமான சிக்குக் கோலமிட்டு, பூக்களால் அலங்காரம் செய்திருந்தனர். கோவை விழா கோலாகலம் என எழுதி, 'வாங்கங்கோ' என கொங்குச் சொல்லாடலில் வரவேற்றிருந்தனர். அதில் 'தினமலர்' பெயரையும் இணைத்திருந்தது முத்தாய்ப்பு.“இது நம்ம ஊரு விழா. பாரம்பரியம் மிக்க ஊர் என்பதைக் காட்டவே, புள்ளி வைத்த கோலம் போட்டுள்ளோம். கோவை விழாவை, 9 நாட்களும் கொண்டாடுவோம். கோல நிகழ்வை ஒருங்கிணைத்த தினமலருக்கு நன்றி,” எனக் கூறியவர்கள், ஒருமித்த குரலில் கோவை விழாவுக்கு 'ஓ' போட்டனர். அபார்ட்மென்டில் கோலம் போடும் நிகழ்வை, ராதாகிருஷ்ணன், சண்முகசுந்தரம், பொங்கினன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

மான்செஸ்டர் சிதாரா

விளாங்குறிச்சி ரோடு, தண்ணீர்ப்பந்தலில் உள்ள 'மான்செஸ்டர் சிதாரா' அபார்ட்மென்டில், பிரேமலதா, திவ்யா, ஜெயஸ்ரீ, சுகன்யா, ராஜலட்சுமி, அபிநயா, பூஜா, வானதி, ஜெயா, அபிதா, சுபா, சாவித்ரி, வசந்தி, வித்யா, ஜெயந்தி, ராஜேஸ்வரி, லட்சுமி, செல்வி ஆகியோரின் கைவண்ணத்தில் அழகிய ரங்கோலி உருவாகியிருந்தது. கல் உப்பில் வண்ணப்பொடி கலந்து, அலகிய கோலம் படைத்து, கோவை விழாவை வரவேற்றிருந்தனர்.அபார்ட்மென்ட் உரிமையாளர் சங்க தலைவர் நளேந்திரன், சுப்பிரமணியம், யுவராஜ், முரளி உள்ளிட்டோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.இன்னும் ஏராளமான குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கானோர் கோவை விழாவை கோலமிட்டு, விளக்கேற்றி வரவேற்றிருந்தனர். 'தினமலர்' நாளிதழின் அழைப்பை ஏற்று கோலமிட்டு, விளக்கேற்றி அதைப் புகைப்படம் எடுத்து, அதை நாம் கொடுத்திருந்த டெலிகிராம் எண்ணில், ஆயிரக்கணக்கானோர் அனுப்பி நம்மைத் திக்குமுக்காட வைத்துள்ளனர். வண்ணமயமாகட்டும்!இந்த வண்ணப்பொடிகளைப் போல நம்வாழ்வும் வண்ணமயமாகவும், பூக்களைப் போல நறுமணம் வீசுவதாகவும் இருக்க வேண்டும் என்ற கருப்பொருளில் இக்கோலத்தை உருவாக்கினோம்.- பிரேமலதா, செயலாளர்,'மான்செஸ்டர் சிதாரா' அபார்ட்மென்ட்உரிமையாளர்கள் சங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ