உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை ஐ.சி.ஏ.ஐ., புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

கோவை ஐ.சி.ஏ.ஐ., புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

துடியலூர்:துடியலூரில், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் (ஐ.சி.ஏ.ஐ.,) கோவை கிளைக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.நிகழ்ச்சியில், தலைவராக விஷ்ணு ஆதித்தன், துணைத் தலைவராக ராகுல் சந்திரசேகரன், செயலாளராக சர்வஜித் கிருஷ்ணன், பொருளாளராக சதீஷ், மாணவர் அமைப்பு தலைவராக தங்கவேல் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.விழாவில், கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமை வகித்து, புதிய நிர்வாகிகளை வாழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக ஐ.சி.ஏ.ஐ., அகில இந்திய முன்னாள் தலைவர் ராமசாமி, கோவை கீதாஞ்சலி பள்ளியின் தாளாளர் அழகிரிசாமி, தென் மண்டல உறுப்பினர் ராஜேஷ், தென் மண்டல செயலாளர் அருண், தென் மண்டல முன்னாள் தலைவர் ஜலபதி, கோவை கிளை முன்னாள் தலைவர் நாககுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை