உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லாரி திருடிய கும்பல் பிடிபட்டது

லாரி திருடிய கும்பல் பிடிபட்டது

அன்னூர் : அன்னூரில் லாரி திருடிய கும்பலை போலீசார், நெகமத்தில் கைது செய்து லாரியை மீட்டனர்.அன்னூர் அருகே உள்ள ஆயிமாபுதூரை சேர்ந்தவர் முத்துச்சாமி (40). இவருக்கு சொந்தமாக ஆல் இந்தியா பர்மிட் உள்ள 2006 மாடல் லாரி உள்ளது. இந்த லாரியை 17ம் தேதி அன்னூரில் கோவை ரோட்டில் யூனியன் ஆபீஸ் முன் நிறுத்தினார். 18ம் தேதி காலையில் சென்று பார்த்தபோது, லாரியை காணவில்லை. யாரோ திருடிச்சென்று விட்டனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.இன்ஸ்பெக்டர் திருமேனி தலைமையில் எஸ்.ஐ., நசீர் மற்றும் போலீசார் நேற்று முன் தினம், பொள்ளாச்சி ரோட்டில் தேடிச்சென்றபோது அங்கு நெகமத்தில் திருட்டு லாரி பிடிபட்டது. திண்டுக்கல், சின்னாளப்பட்டி குமாரின் மகன் பிரபு (30), ஈரோடு, ஆர்.என்.புதூர், அருணாசலம் மகன் ரவி (30), அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுரேஷ்குமார் (27) ஆகிய மூவரும் லாரியுடன் பிடிபட்டனர். லாரியை கைப்பற்றிய போலீசார், இந்த கும்பலுக்கும் மாவட்டத்தில் வேறு இடங்களில் நடந்த லாரி திருட்டுக்கும் தொடர்பு உள்ளதா என, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை